மன்னார் புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள மலசல கூட தொகுதி திடீர் என முழுமையாக மூடல் - மக்கள் பாதிப்பு.
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட புதிய பேரூந்து தரிப்பிட வளாகத்தில்
காணப்படும் மன்னார் நகர சபையயின் கண்காணிப்பில் உள்ள பொது மலசல கூடம்
இன்றைய தினம் (சனிக்கிழமை) காலை முதல் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய தினம் பேரூந்து தரிப்படத்திற்கு வந்த மக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும்
இன்றைய தினம் சனிக்கிழமை காலை மடு திருத்தலத்திற்குச் சென்று மீண்டும்
மன்னருக்கு வந்த மக்கள் மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள மல சல
கூட தொகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால பல்வேறு அசௌகரியங்களுக்கு
முகம் கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
தற்போது
குறித்த மலசல கூட தொகுதி முழுமையாக மூடப்பட்ட நிலையில் உள்ளமையினால் மலசல
கூடத்திற்கு செல்ல உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து
வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடையம் தொடர்பில் உடனடியாக மன்னார் நகர சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னார் புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள மலசல கூட தொகுதி திடீர் என முழுமையாக மூடல் - மக்கள் பாதிப்பு.
Reviewed by Author
on
August 15, 2020
Rating:

No comments:
Post a Comment