போக்குவரத்து சேவைகளின் வளர்ச்சி பேருந்தை கழுவி சுத்தம் செய்யும் கட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்....
பேருந்தை கழுவி சுத்தம் செய்யும் கட்டத்திலிருந்து போக்குவரத்து சேவைகளின் வளர்ச்சி ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற போக்குவரத்து அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏனைய மாவட்டங்களின் வாகன ஒழுங்குமுறை, பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் ரயில் சேவைகள், வாகனத் தொழில்கள் ஆகியவற்றின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் நேர்மறையான அணுகுமுறையுடன் பயணிகளை பொதுபோக்குவரத்தில் பயணிக்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய இன்று முதல் பேருந்துகளை கழுவி சுத்தம் செய்யும் பணிகளை தொடங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
பேருந்து வேலைக்குச் செல்வதற்கும், போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்கும் பார்க் மற்றும் டிரைவ் (PARK AND DRIVE) முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருங்கிணைந்த ரயில் மற்றும் பேருந்துசேவை, பேருந்து கால அட்டவணையை உடனடியாக தொடங்குமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷ அறிவுறுத்தினார்.
மோட்டார் போக்குவரத்துத் துறையை ஊழல் மற்றும் முறைகேடு அற்ற நிறுவனமாக மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது..
Reviewed by Author
on
August 19, 2020
Rating:


No comments:
Post a Comment