அண்மைய செய்திகள்

recent
-

மோட்டார் சைக்கிள் இறக்குமதி தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை..

மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்வதில் உள்ள தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இருசக்கர வாகன விற்பனையாளர் முகவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அகில இலங்கை புதிய
இருசக்கர வாகனங்களின் விற்பனை முகவர் சங்க கிழக்கு மாகான பிரதிநிதி ஐயாசாமி ராமலிங்கம் தெரிவித்தார்..

குறித்த விடயம் தொடர்பாக இன்று ( சனிக்கிழமை) இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்போது  இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது, ”நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான
கட்டுப்பாட்டை அரசாங்கம் விதித்துள்ளது.

இதில் டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பலை நிலையானதாகப் பேணுவதற்காக அரசாங்கம் இருசக்கர வாகனங்களின் இறக்குமதியில் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்காரணமாக  இறக்குமதி செய்யப்படும்
இருசக்கர வாகனங்களை நம்பி தொழில் செய்யும் வாகன முகவர்கள், எம்மிடம் தொழில்புரியும் தொழிலாளர்கள், திருத்த வேலைசெய்யும் தொழிலாளர்கள், உள்ளிட்ட அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட 4 சதவீத கடன் தொகையினைப் பெற்றே இத்தொழிலினை நாங்கள் செய்து வருகின்றேம். இத்தடை காரணமாக இக்கடன் தவணைக் கட்டணங்களையும் செலுத்த முடியாமற்
போயுள்ளது.

எனவே ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனஞ்செலுத்தி இருசக்கர வாகன இறக்குமதியில் ஏற்படுத்தியுள்ள தடையினை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...



மோட்டார் சைக்கிள் இறக்குமதி தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை.. Reviewed by Author on August 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.