மன்னார் மறைமாவட்ட ஆயரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம்
ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(9) மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆயர்
இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல்
பெர்னாண்டோ ஆண்டகையிடம் ஆசி பெற்றதோடு,பல்வேறு விடையங்கள் குறித்தும்
கலந்துரையாடியுள்ளனர்.
நடை
பெற்ற பாராளுமன்ற பொது தேர்தலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின்
அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சி
சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம்
அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மறைமாவட்ட ஆயர் அவர்களிடம் ஆசி பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயருடன் கலந்துரையாடினர்.
குறித்த
கலந்துரையாடலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு
குறித்தும், ஏனைய விடையங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளமை
குறிப்பிடத்தக்கது..
மன்னார் மறைமாவட்ட ஆயரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
Reviewed by Author
on
August 10, 2020
Rating:
No comments:
Post a Comment