மன்னாரில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி வேலைதிட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்வு.
சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி வேளைதிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கை தொடர்பாகவும், முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராயும் கூட்டம் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ் தலைமயில் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (25) மாலை இடம் பெற்றது.
l
குறித்த கூட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந் தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேசச் செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், சம்பந்தப்பட்ட தினைக்கள உயர் அதிகாரிகள், மன்னார் மாவட்ட விவாசய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
-மன்னார் மாவட்ட பகுதியில் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 'சௌபாகக்கியா' விவசாய நடவடிக்கை , மேட்ட நிலப் பயிர் செய்கை மற்றும் உப பயிர்செய்கை தொடர்பாக ஆரயப்பட்டது.
குறித்த சௌபாக்கியா உணவு உற்பத்தித் திட்டம் மன்னார் மாவட்ட பகுதியில் வெற்றியளித்துள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் ஒவ்வொரு விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக தனித்தனியாக உற்பத்தி மற்றும் அறுவடை விற்பனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது .
-மேலும் குறித்த உணவு உற்பத்தி மாவட்ட மட்டத்தில் வெற்றி அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளதுடன் மேலதிகமாக பனை , தென்னை மரமுந்திரி ,செய்கையையும் ஊக்கப்படுத்தி செய்கையை மாவட்ட மட்டத்தில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கையும் ஆராயப்பட்டள்ளது.
மன்னாரில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி வேலைதிட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்வு.
Reviewed by NEWMANNAR
on
August 26, 2020
Rating:

No comments:
Post a Comment