வவுனியாவில் பாதைகளை ஆக்கிரமிக்ககும் நடைபாதை வியாபாரங்கள்.....
வவுனியா நகர்ப்பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்தது வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டு வருவதனால் வி பத்துக்கள் ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது.
வவுனியா – இலுப்பையடி, புகையிரதநிலைய வீதி, ஹொரவப்பொத்தான வீதி
போன்றவற்றில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நடைபாதையை முழுமையாக ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவதால் மக்கள் வீதியால் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் நடமாட்டம் கூடிய இடத்தில் இவ்வாறு ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவதால் வி பத்துக்களும் சம்பவித்து வருகின்றன.
எனவே நகரசபை மற்றும் பொலிஸார் இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ..
Reviewed by Author
on
August 18, 2020
Rating:



No comments:
Post a Comment