நாடளாவிய ரீதியில் மீனவர்கள் மற்றும் மீன்பிடியில் ஈடுபடும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
நாடளாவிய ரீதியில் சிறு மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் சமூக பொருளாதார சுற்றாடல் மற்றும் அரசியல் நிலைமைக்குள் நீலப் பொருளாதாரதின் தாக்கம் மற்றும் அதன் நிலைபெறு தொடர்பான விடயங்களை மன்னார் மாவட்ட ரீதியில் இயங்கும் மீனவ பெண்கள் குழு மற்றும் மீனவர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் மன்னார் இணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் இடம் பெற்றது
குறித்த கூட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி இயற்கையான வளங்களை சூறையாடுதல் கடல் ஆய்வுகள் மணல் ஆய்வுகள் தொடர்பான விடயங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பாக ஆரயப்படாதுடன் இவ்வாறன செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய குறுகிய கால மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் தொடர்பாக விரவாக கலந்துரையாடப்பட்டது
இக் கலந்துரையாடலில் ஆசிய நாடுகளை சேர்ந்த இந்தோனேசியா தாய்லாந்து இந்தியா பங்களாதேஸ் போன்ற நாடுகளை சேர்ந்த பிரதிநிதி கள் இணையதளத்தின் ஊடாக நேரலையாக கலந்து கொண்டு கருத்துக்களையும் விரிவுரைகளையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடதக்கது
மன்னார் நகர் நிருபர்
Reviewed by NEWMANNAR
on
August 27, 2020
Rating:








No comments:
Post a Comment