மலேசியாவில் தஞ்சமடையும் ரோஹிங்கியா அகதிகள்:
ஐ.நா. அகதிகள் ஆணையத்திடம் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக நடக்கும் கலந்தாலோசனைகளில் மலேசியாவுக்கு உதவுமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது நாடொன்றில் ரோஹிங்கியா அகதிகள் குடியமர்த்தப்படுவார்கள் என்ற நிபந்தனையின் கீழ் மலேசியா அகதிகளை அனுமதித்து வந்திருக்கிறது. அந்த வகையில், ஐ.நா. அகதிகள் ஆணையத்துடனான மலேசிய உறவு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
ஆனால் இந்த வகையில் அகதிகள் குடியமர்த்தப்படவில்லை எனக் கூறும் மலேசிய அமைச்சர் ஹூசைன், “மியான்மரிலிருந்து வரும் அகதிகளை மேலும் ஏற்றுக்கொள்ளுமாறு சில தரப்புகள் சொல்வது நியாயமற்றது,” எனக் கூறியிருக்கிறார்.
“இதற்கு
ஐ.நா. அகதிகள் ஆணையமே பொறுப்பு. அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், இதனை
தீர்க்க அமெரிக்கா எங்களுக்கு உதவ முடியும் என நினைக்கிறேன்,” ரோஹிங்கியா அகதிகள விவாகரத்தை அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் மைக் பாம்பியோவிடம் முன்வைத்துள்ள ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by Author
on
August 13, 2020
Rating:


No comments:
Post a Comment