அமெரிக்காவிலும் டிக்டொக் செயலியை தடை .....
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிக் டொக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.
இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால்
டிக் டொக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.டிக் டொக்கின் 30 சதவிகித பங்குகளை மட்டும் வாங்குவதைவிட அந்நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் வாங்குவது சுலபமான ஒன்றுதான்.
அமெரிக்க நிறுவனங்கள் யாரும் டிக் டொக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயற்பட தடை விதிக்கப்படுகிறது.
ஒருவேளை விற்பனை நடைபெறும் பட்சத்தில் அந்த விற்பனை ஒப்பந்தத்திற்கு உதவும் வகையில் டிக் டொக்கை வாங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு குறிப்பிட்டத் தொகை அரசின் பங்காக வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி தூதரகத்தை உடனடியாக மூட அமெரிக்கா உத்தரவிட்டது.
ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியா மேற்கொண்டநடவடிக்கை போன்றே சீனாவின் டிக் டொக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக் டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் டிக் டொக்கின் தாய்நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இதனால் ட்ரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக்டொக் செயலியின் அமெரிக்க செயற்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது
டிக் டொக் செயலியின் அமெரிக்க உரிமம்விற்பனைக்கு வருவதால் அதை வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையிலேயே, டிக் டொக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒருவேளை டிக்டொக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால்
செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயற்பட தடை விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
அமெரிக்காவிலும் டிக்டொக் செயலியை தடை .....
Reviewed by Author
on
August 04, 2020
Rating:
Reviewed by Author
on
August 04, 2020
Rating:


No comments:
Post a Comment