#gmaildown ஹேஷ்டேக்கில் குறை கருத்துக்களை பதிவிட்ட நெட்டிசன்கள்....
உலகம் முழுவதும் ஜிமெயில், கூகுள் டிரைவ் பயன்பாட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்மைய, ஜிமெயிலில் இணைப்புகளை அனுப்பும்போது பல சிக்கலை எதிர்கொள்வதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கூகுள் அப்ளிகேஷன் பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதை அடுத்து சேவையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத்தொடர்ந்து, ஜிமெயில் சேவை முடங்கியது குறித்து கூகுள் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கூகுள் மீட், கூகுள் வோய்ஸ் மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஜிமெயில் சேவை முடங்கியது குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களில் #gmaildown என்ற ஹேஷ்டேக்கில் தங்களது குறை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment