அண்மைய செய்திகள்

recent
-

மனைவி 4 மாத கர்ப்பிணி - தூக்கில் தொங்கிய கணவன்! வவுனியாவில் சம்பவம்!

 வவுனியா கூமாங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டாம் குருக்குத்தெரு வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.


இன்று (08) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

22 வயதுடைய ரஞ்சித் வசந் என்ற இளைஞன் திருமணம் முடிந்து மனைவியுடன் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கை பகுதியில் வசித்து வருகின்றார்.

குறித்த இளைஞனின் மனைவி நான்கு மாத கர்ப்பிணியாக காணப்படுவதினால் அவர் இன்று (08 ) காலை நெடுங்கேனி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இந் நிலையில் தனிமையில் குறித்த இளைஞன் இருந்துள்ளான்.

மாலை 5.00 மணியளவில் இளைஞனின் சகோதரன் வீட்டுக்கு சென்று பார்வையிட்ட சமயத்தில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதினை அவதானித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூமாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த 03 ம் திகதியும் தூக்கில் தொங்கிய நிலையில் 26 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்தமை குறிப்பிடத்தக்கது. 


மனைவி 4 மாத கர்ப்பிணி - தூக்கில் தொங்கிய கணவன்! வவுனியாவில் சம்பவம்! Reviewed by Author on September 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.