கொரோனா அச்சம் – மேலும் 764 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
அதன் தொடர்ச்சியாக கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து மேலும் 764 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி கட்டார் தோஹாவிலிருந்து நேற்றிரவு 39 இலங்கையர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் டுபாயில் இருந்து 413 இலங்கையர்களும் ஜப்பானின் நரிட்டாவிலிருந்து 18 இலங்கையர்களும் அவுஸ்ரேலியாவின் மெல்போர்னில் இருந்து 294 இலங்கையர்களும் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டை வந்தடைந்தனர்.
இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
.
.
கொரோனா அச்சம் – மேலும் 764 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
Reviewed by Author
on
September 21, 2020
Rating:

No comments:
Post a Comment