முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 92 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கி வைப்பு
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 92 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கி வைப்பு.
(மன்னார் நிருபர்)
(02-09-2020)
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 92 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக்கடிதம் இன்றைய தினம் புதன் கிழமை(2) முசலி பிரதேசச் செயலாளர் சி.ராஜீவ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த 92 பட்டதாரி பயிலுனர்களும் இன்றைய தினமே முசலி பிரதேசச் செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
-பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்குவது தொடர்பாக பரிசீலினைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் முசலி பிரதேசச் செயலாளர் சி.ராஜீவ் அவர்களின் துரித நடவடிக்கைகளினால் இன்றைய தினம் புதன் கிழமை குறித்த பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள் முசலி பிரதேசச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
September 02, 2020
Rating:







No comments:
Post a Comment