மன்னார் நகரசபையில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை - உறுப்பினர்களே குற்றச்சாட்டு
மன்னார் நகரசபையில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை
மன்னார் நகரசபை உறுப்பினர்களே குற்றச்சாட்டு
10.09.2020
கடந்த மூன்று வருடங்களாக மன்னார் நகரசபை அமர்வுகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மனங்களை விட நிறைவேற்றப்படாத தீர்மானங்களே அதிகமாக நடைமுறைப்படுத்துவதாகவும் சபையில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்
மன்னார் நகரசபை அமர்வுகளில் உறுப்பினர்களால் கொண்டுவரப்படுகின்ற கோரிக்கைகள் பிரேரணைகள் சபை அமர்வுகளில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டாளும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அவற்றை செயற்படுத்துவதற்குப்பதிலாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு நேர் எதிரான விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மன்னார் நகரசபை உறுப்பினர் மைக்கல் கொலின் குற்றம் சுமத்தியுள்ளார்
கடந்த சபை அமர்வில் மன்னார் நகர் பகுதிகளுக்குள் உள்ள சட்ட விரோத கடைகளை அகற்றுமாறு ஏகமனதாக தீர்மானம் மேற்கோள்ளப்பட்டிருந்த நிலையில் இன்றுவரை சட்டவிரோத கடைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் புதிது புதிதாகாக நகரசபை அங்கத்தவர்களின் அனுமதியோ சபை அனுமதியோ இன்றி கடைகள் அமைக்கப்படுவருவதாகவும் நகரசபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்
இன்றைய தினம் மன்னார் நகரசபை பூங்காவின் பெயர்பலைகையை கூட மறைக்கும் முகமாக கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடை அமைப்பதற்கான அனுமதி நகரசபையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்களினால் முன்வைக்கப்பட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட மன்னார் நகரசபை உறுப்பினர்களான மைக்கல் கொலின் ரெட்ணாசிங்கம் குமரேஸ் ,ஜோசப் தர்மன், குறித்த இடத்தை பார்வையிட்ட பின்னர் மேற்படி தெரிவித்துள்ளனர்
அதே நேரத்தில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அன்றாட ஜீவனோபாயத்துக்கு என சிறு சிறு வியாபாரங்களை மேற்கொள்ளும் பாமர மக்களின் கடைகளை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபடும் நகரசபை மன்னார் மாவட்டத்தை சாராத பெரும் பணக்காரர்களுக்கு நகரசபை ஊடாக தண்ணிச்சையாக கடைகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்
இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் தொடரும்பட்சத்தில் மன்னார் நகர சபையின் அடுத்த அமர்வில் இது தொடர்பாக தெரிவித்து வெளியேறப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்
அதே நேரத்தில் மன்னார் நகர எல்லை பகுதிக்குள் நகரசபை அனுமதி இன்றி அதிகளவான கடைகள் வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் தனி நபர்களுக்கு இரண்டு கடைகளும் இரண்டுக்கு மேற்பட்ட கடைகளும் வழங்கப்பட்டுவருதாகவும் தெரிவிக்கப்படுள்ளத ு
1
மன்னார் நகரசபையில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை - உறுப்பினர்களே குற்றச்சாட்டு
Reviewed by Author
on
September 10, 2020
Rating:

No comments:
Post a Comment