இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை துறந்தார் துரைராசசிங்கம்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து, தன்னிச்சையாக செயற்பட்டதாக அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரின் கடிதத்தில்,
Reviewed by NEWMANNAR
on
September 11, 2020
Rating:


No comments:
Post a Comment