கொரோனா அச்சம் காரணமாக மன்னார் பிரதான புகையிரத நிலையம் மூடல்
கொரோனா அச்சம் காரணமாக மன்னார் செளத்பார் பிரதான புகையிரத நிலையம் மூடல்.
மன்னார் நிருபர்
13.09.2020
மன்னார் பிரதான புகையிரத நிலைய பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (13) முதல் எதிர்வரும் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த புகையிரத நிலைய ஊழியர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகையிரத நிலையத்திலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
வவுனியா பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பித்து வந்த நபர் ஒருவர் நேற்றைய தினம்(13) சனிக்கிழமை மாலை மன்னார் செளத்பார் பகுதியில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மன்னார் செளத்பார் புகையிரத நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நடமாடி திரிந்ததையடுத்து மன்னார் பிரதான புகையிரத நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து மன்னார் வரும் புகையிரதங்களும் தரித்து நிற்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளை புகையிரத நிலையம் மேற்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை(13) மன்னார் புகையிரத நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் , புகையிரத நிலைய ஊழியர்களுக்கு சி.பீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் புகையிரத நிலைய பகுதிகளை சூழ மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
கொரோனா அச்சம் காரணமாக மன்னார் பிரதான புகையிரத நிலையம் மூடல்
Reviewed by Admin
on
September 13, 2020
Rating:
Reviewed by Admin
on
September 13, 2020
Rating:








No comments:
Post a Comment