பிரதி பொலிஸ்மா அதிபரினால் வன்னி மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
இலங்கையில் செயற்படும் ஒரே ஒரு 24 மணி நேர தமிழ் மொழி மூல பொலிஸ் அவசர சேவை இயங்கி கொண்டிருப்பதாகவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் இரகசியம் பேணப்படும் எனவும் வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரால் இன்று ( வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் துண்டு பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தகவல்கள், சட்டவிரோதமான மதுபானம், போதை வஸ்து தொடர்பான தகவல்கள், தேசிய பாதுகாப்பிற்கு பாதகம் விளைவிக்கக் கூடிய செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள், வன அழிப்பு, மண் அகழ்வு, வனவிலங்கு அழிப்பு போன்ற ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் கூடிய தகவல்கள், தேசிய மரபுரிமைக்கு சொந்தமான உடமைகள் அழித்தல் தொடர்பான தகவல்கள், விபத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான தகவல்கள், பொலிஸ் சேவை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சட்டவிரோத பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான தகவல்கள் எவ்விதமான குற்ற செயல்களாயினும் அவற்றை எங்களுக்கு
0766 22 49 49,
0766226363
போன்ற இலக்கத்திற்கு எமக்கு முறைப்பாடுகளை மேற்கொள்ளும்போது இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் தகவல்கள், இரகசிய தன்மையும் பாதுகாக்கப்படும் என வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment