மட்டக்களப்பில் டெனிஸ் விளையாட்டினை ஊக்குவிக்க நடவடிக்கை.
அந்தவகையில் இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் சங்கம் அரச அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் வயதுவந்தவர்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றம் மற்றும் வேலைப்பழுவினால் ஏற்படும் மனசோர்வினை மாற்றும் வகையில் வளர்ந்தோருக்கான டெனிஸ் விளையாட்டினை மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் சங்கம் ஆரம்பித்துள்ளது.
அதற்கான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு லேக் வியு டெனிஸ் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்றது
தேசிய பங்குபற்றல் அதிகாரி எஸ் சியானந்த் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட டெனிஸ் பயிற்சி நிலைய தலைவர் என்.ஜனன், தலைமையில் நடைபெற்ற வயது வந்தோருக்கான டெனிஸ் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வில் மாவட்ட டெனிஸ் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தர்சன், மாவட்ட டெனிஸ் பயிற்சி நிலையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் வி. தினேஷ், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஹரிபிரசாத் மற்றும் பாடசாலை மாணவர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை இலங்கை டெனிஸ் சம்மேளனத்தின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்ட டெனிஸ் பயிற்சி நிலையத்திற்கு சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான டெனிஸ் விளையாட்டுக்கான ரெக்கட்டுக்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பில் டெனிஸ் விளையாட்டினை ஊக்குவிக்க நடவடிக்கை.
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment