தியாகி திலீபன் நினைவேந்தல் தமிழர்களின் அடிப்படை உரிமையை வலியுறுத்திய தமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது!
வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை ஒன்றுகூடிய தமிழ் தேசியம் சார் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கையெழுத்திட்டுள்ளார்கள்.
இந்தக் கடிதத்தில், இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய தமிழ் தேசிய சார்பு கட்சிக்ள கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், சிவஞானம் ஸ்ரீதரன்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், புளொட் சார்பில் பா.கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ் பிரேமச்சந்திரன்
மேலும், தமிழ் தேசியக் கட்சி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா, ஈழத்தமிழர் சுயாட்சின் கழகம் சார்பில் அனந்தி சசிதரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சி.சிற்பரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்
.
.
தியாகி திலீபன் நினைவேந்தல் தமிழர்களின் அடிப்படை உரிமையை வலியுறுத்திய தமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது!
Reviewed by Author
on
September 19, 2020
Rating:
Reviewed by Author
on
September 19, 2020
Rating:








No comments:
Post a Comment