மன்னார் அடம்பன் பகுதியில் குணரத்தினம் பவுண்டேசன் அடம்பன் கல்வி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
ஆட்காட்டிவெளி பங்குத்தந்தை சத்தியராஜ் அவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,சிறப்பு விருந்தினராக மடுவலய உதவிக்கல்விப்பணிப்பாளர் அமல்ராஜ்,அடம்பன் பாடசாலை அதிபர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கனடா நாட்டில் வசிக்கும் சசி குணரத்தினம் அவர்கள் தனது தந்தையார் ஞாபகர்தமாக குணரத்தினம் அடம்பன் கல்வி நிலையத்தை நிறுவி இப் பிரதேச மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க முன்வந்தார்.
அடம்பன் பிரதேச மாணவர்கள் மாலை நேர கல்வி நிலையம் இன்றி பெரிதும் சிரம்ப்பட்டனர் இதை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு பொது அமைப்புக்கள் கொண்டுவந்ததின் அடிப்படையில் இக்கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சசி குணரத்தினம் அவர்களின் சேவைகளை குறிப்பிட்டதுடன் இந்த கல்வி நிலையத்தை அமைத்து தந்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
இக் கல்வி நிலையத்தில்மாணவர்கள் சிரமம் இன்றி தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும்.சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை முன்னெடுத்து இம் மாவட்டத்தை கல்வியில் முன்னிலைக்கு கொண்டுவருவதற்கு இக் கல்வி நிலைய நிர்வாகத்தினர் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மன்னார் அடம்பன் பகுதியில் குணரத்தினம் பவுண்டேசன் அடம்பன் கல்வி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment