மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பும் அப்துல் கலாம் அக்கினி சிறகுகள் அமைப்பும் இணைந்து மன்னாரில்....(Photos
மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பும் அப்துல் கலாம் அக்கினி சிறகுகள் அமைப்பும் இணைந்து இன்று (2020-09-12 ) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உள்ளடங்கும் தேவன்பிட்டி கிராமத்தில் காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டத்தில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணம் வழங்குதல், பசுமை புரட்சி மரநடுகை திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தனர்
குறித்த நிகழ்விற்கு தேவன்பிட்டி வண. அருட்சகோதர்ர், மனித உரிமைகள் சமாதான தூதுவர் அமைப்பின் வடமாகான பணிப்பாளரும் அப்துல் கலால் அக்கினி சிறகுகளின் இலங்கைக்கான பணிப்பாளருமாகிய DR. ஶ்ரீமான் கனேசராஜா மற்றும் மன்னார் மாவட்ட சமாதான தூதுவர் அமைப்பின் பணிப்பாளர் ,பிரதி பணிப்பாளர் திரு. டியூக் குரூஸ், சமாதான தூதுவர் அமைப்பின் மகளிர் அணி பணிப்பாளர் செல்வி தமிதாள் பிரதி பணிப்பாளர் மயூரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமாதான தூதுவர் அமைப்பின் செயலாளர், வ்வுனியா மாவட்ட சமாதான தூதுவர் அமைப்பின் பிரதி பணிப்பாளர் உள்பட பாடசாலை மாணவர்கள் ஊர்மக்கள் என கலந்து சிறப்பித்தார்கள் நிகழ்வில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

No comments:
Post a Comment