கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள விசேட ஆலோசனைகள்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் விசேட ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒன்றிணைந்து இந்த ஆலோசனைகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் எற்பட்டுள்ள அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு 4 பிரிவுகளின் கீழ் இந்த ஆலோசனைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன
.
விளையாட்டு நடவடிக்கையின் போது கைகளை கழுவுதல் மற்றும் சுகாதார முறைப்படி உணவு உட்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை முன்னெடுத்தல் போன்ற அடிப்படை ஆலோசனைகளுக்கு மேலதிகமாக விளையாட்டு மைதானங்களில் பிரவேசிப்போருக்கு போதுமான சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு இடம்பெறும் சுற்றாடலில் உணவு விற்பனை மற்றும் உணவை விநியோகிக்கும் பணியாளர்களின் சகாதார பாதுகாப்பு விடயங்களை உரிய முறையில் முன்னெடுத்தல் உள்ளிட்டன இந்த ஆலோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள அதிபர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு தெளிவுபடுத்துவதற்கு தற்பொழுது அனைத்து மகாண கல்வி அதிகாரிகள் விளையாட்டு சங்கங்களின் முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள விசேட ஆலோசனைகள்
Reviewed by Shaathana
on
September 18, 2020
Rating:
Reviewed by Shaathana
on
September 18, 2020
Rating:


No comments:
Post a Comment