பொதுமக்கள் தினத்தில் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தெரியப்படுத்துமாறு அறிவிப்பு
சில அரச நிறுவனங்களில் திங்கட்கிழமையன்று அதிகாரிகள் இல்லாத சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அத்தகைய நிறுவனங்கள் தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பான அமைச்சுக்கோ அல்லது தமது அமைச்சிற்கோ தெரியப்படுத்துமாறு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தமது காரியாலயங்களுக்கு செல்லாத கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் தமக்கு தெரியப்படுத்தமாறு பொது சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.அத்தகைய அதிகாரிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், கிராம உத்தியோகத்தர்களின் சேவைகள் தொடர்பான சுற்றுநிரூபமொன்று உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் அண்மையில் வௌியிடப்பட்டது.
இதனடிப்படையில் கிராம உத்தியோகத்தர்கள் தமது ஓய்வு நாள் தவிர்ந்த ஏனைய 6 நாட்களும் 24 மணித்தியாலங்கள் தமது பிரிவில் கடமைகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தினத்தில் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தெரியப்படுத்துமாறு அறிவிப்பு
Reviewed by Author
on
September 27, 2020
Rating:
Reviewed by Author
on
September 27, 2020
Rating:


No comments:
Post a Comment