மன்னார் உயிலங்குளம் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் இரு பெண்கள் உட்பட 5 பேர் கைது-
மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் கைது இன்று செவ்வாய்க்கிழமை(15) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து உயிலங்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(15) அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 52 கிலோ கேரள கஞ்சா மற்றும் 920 கிலோ மஞ்சள், 17 இலட்சம் ரூபா பணம், லொறி மற்றும் டிரக்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார்
பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளனர்.
மன்னார் உயிலங்குளம் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் இரு பெண்கள் உட்பட 5 பேர் கைது-
Reviewed by NEWMANNAR
on
September 15, 2020
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 15, 2020
Rating:


No comments:
Post a Comment