வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தில் இருவர் பளை பொலிஸாரினால் கைது!
பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளன்.
வீதி ஓரத்தில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சந்தேகத்திற்கிடமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸார் சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது இருவரும் தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.
குறித்த இடத்தில் பையொன்றிலிருந்து வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெடிபொருட்களை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 மற்றும் 23 வயதுடைய கிளாலி பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தில் இருவர் பளை பொலிஸாரினால் கைது!
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment