மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!
நேற்று (24) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் இருந்து வழுக்கிச் சென்று கொங்கிரீட் தூண் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், பின்னால் அமர்ந்து சென்ற நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் புலஸ்திபுர வைத்தியசாலையில் சுவசெரிய நோயாளர் காவு வண்டியில் சாரதியாக பணி புரிந்த 35 வயதுடைவர் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் பகமுண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!
Reviewed by Author
on
September 25, 2020
Rating:

No comments:
Post a Comment