மாத்தறையில் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜைக்கு கொரோனா
குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய விமானப் பணியாளர் குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரஷ்ய பிரஜைகள் 15 பேர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக கடந்த 13 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் அவர்களிடம் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் குறித்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
அவர்கள் இன்று சீனா பயணமாக இருந்ததுடன், நேற்று முன்தினம் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் PCR பரிசோதனைக்குட்பட்டனர்.இதனையடுத்து, அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான ரஷ்யப் பிரஜை சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்கள் ஹம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதுடன், ஹோட்டலின் ஊழியர்கள் குழு ஹபராதுவையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மாத்தறையில் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜைக்கு கொரோனா
Reviewed by Author
on
September 25, 2020
Rating:

No comments:
Post a Comment