COVID-19 தடுப்பூசி கூட்டணியில் இணைவதாக பிரேசில், அர்ஜென்டினா அறிவிப்பு
COVID-19 தடுப்பூசிகள் உலகளாவிய அணுகல் வசதி (COVAX) மூலம் 12 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பெரு தெரிவித்தது.
இந்நிலையில் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க அர்ஜென்டினா அரசாங்கம் அதிகநேரம் கோரியிருந்தது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைமையிலான தடுப்பூசி பொறிமுறையில் அதன் உறுதிப்பாட்டில் எதிர்வரும் புதன்கிழமை கையெழுத்திட அர்ஜென்டினா எதிர்பார்க்கிறது என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கோவக்ஸ் செயலகமான காவ்வி, தடுப்பூசி கூட்டணியுடன் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இது கோவாக்ஸில் பதிவுபெறும் என பிரேசில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள COVID-19 தடுப்பூசிகளுக்கு விரைவான, நியாயமான மற்றும் சமமான அணுகலை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு பொறிமுறையான COVAX ல் இணைவதற்கு 150 ற்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
COVID-19 தடுப்பூசி கூட்டணியில் இணைவதாக பிரேசில், அர்ஜென்டினா அறிவிப்பு
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment