அண்மைய செய்திகள்

recent
-

ஜப்பான் கப்பல்கள் பயிற்சியின் பின்னர் புறப்பட்டுச் சென்றன

ஜப்பான் கரையோர தற்காப்புப் படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது. இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தொடர்புகளின் வரலாற்றுக்கு கொழும்பு துறைமுகம் நேரடி நினைவுச்சின்னமாகும்.

அந்த நினைவுகளை புதுப்பித்து ஜப்பான் கரையோர தற்காப்புப் படைக்கு சொந்தமான JS Kaga மற்றும் JS Ikazuchi ஆகிய கப்பல்கள் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

 248 மீட்டர் நீளமுடைய JS Kaga கப்பல் 380 பணியாளர்களைக் கொண்டுள்ளது. JS Ikazuchi கப்பல் 151 மீட்டர் நீளமுடையதாகும். இந்த கடல் குடிவரவை உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தி கடற்படையின் பிரதி படைகளின் தலைவர் மற்றும் மேற்கு கடலின் கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, ஜப்பான் கரையோர தற்காப்புப் படையின் Kaga கப்பல் இலச்சினை அதிகாரி ரியர் அட்மிரல் கொன்னோ யசூஷிகே ஆகியோர் கொழும்பு துறைமுகத்தில் சந்தித்தனர்.

 இதேவேளை, வெற்றிகரமான கடல் பயிற்சியின் பின்னர் ஜப்பான் கரையோர தற்காப்புப் படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களும் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக இலங்கை கடற்படை இன்று பிற்பகல் அறிக்கையின் மூலம் அறிவித்தது

.
ஜப்பான் கப்பல்கள் பயிற்சியின் பின்னர் புறப்பட்டுச் சென்றன Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.