உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் ஒழுங்கமைப்பில் நேற்று (சனிக்கிழமை) இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களில் வருமான வரி பரிசோதகர் போதாமை பற்றி தீர்மானித்தல், பிரதேச சபையில் ஆவளிப் பற்றாக்குறை பற்றி தீர்மானம் மேற்கொள்ளல், தவிசாளருக்குரிய வாகனம் தொடர்பான கலந்துரையாடல், உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் பற்றிய தீர்மானம், PSDG நிதி இல்லாமையினால் ஏற்படும் பிரச்சனைகள், ஆளுநரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பற்றி முன்கூட்டியே தவிசாளர்களிடம் கலந்தாலோசிக்காமை பற்றிய கலந்துரையாடல், தவிசாளரை சந்திக்க வருபவர்களுக்கான உபசரனை செலவு பற்றிய விபரம், பிரதேச செயலகத்தினால் செப்பனிடப்படும் பாதைகள், வடிகால்கள் தொடர்பான கலந்துரையாடல், அம்பாறை மாவட்ட தவிசாளர்கள் ஒன்றிணைந்து சங்கம் அமைக்க தீர்மானம் மேற்கொள்ளல் என்பன தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆர்.டபிள்யூ கமலராஜன், ஆலையடி வேம்பு பிரதேச சபை தவிசாளர் கிரோஜ்கரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றங்களில் இடம்பெறும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்.
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment