கரையொதுங்கிய பெண்ணின் சடலம் - பொலிஸார் விசாரணை!
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) காலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சடலம் அடையாளம் காணப்படாததால், பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியிருந்தனர். அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இறந்த பெண்ணின் மகள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், உயிரிழந்தவர் கல்முனை 02 அன்னை வேளாங்கண்ணி வீதியை சேர்ந்து 2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க ´சின்னத்தம்பி நேசம்மா´ என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருதுடன் சடலம் கல்முனை ஆதார வைத்திறசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கரையொதுங்கிய பெண்ணின் சடலம் - பொலிஸார் விசாரணை!
Reviewed by Author
on
September 25, 2020
Rating:

No comments:
Post a Comment