பதவியில் இருந்து சமாதானமாக விலக மாட்டேன் ட்ரம்ப் அறிவிப்பு
நிச்சயமாக பதவியில் நீடிப்பு ஏற்படுமே தவிர பதவி விலகலுக்கான வாய்ப்பில்லை என வௌிப்படையாக கூறுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
என்ன இடம்பெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தபால் மூல வாக்களிப்பு பேரழிவாக அமையும் என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
COVID – 19 தொற்று நிலைமை காரணமாக இந்த தடவை தேர்தலில் வாக்களிப்பு தபால் மூலம் இடம்பெறவுள்ள நிலையில், அதிக மோசடிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிச்சயமாக பதவியில் நீட்சி ஏற்படுமே தவிர பதவி விலகலுக்கான வாய்ப்பில்லை என வௌிப்படையாக கூறுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2016 ஜனாதிபதித் தேர்தலிலும் தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், தேர்தல் முடிவு அமெரிக்க ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல் என கூறியிருந்ததுடன் அதனை ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் மறுத்தார்.
இந்நிலையில், தேர்தல் தோல்வியை எச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என ஹிலாரி கிளிண்டன், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனுக்கு கடந்த மாதத்தில் கூறியிருந்தார்.
பதவியில் இருந்து சமாதானமாக விலக மாட்டேன் ட்ரம்ப் அறிவிப்பு
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment