கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை முறையாக கையாளவில்லை என ராகுல் காந்தி தொடர்ச்சியாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது ருவிட்டர் பக்கத்தில் மத்திய அரசு மீது மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த ருவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, “தரவுகள் இல்லாத அரசு. விளக்கேற்றுவதையும், தட்டுகளை தட்டுவதையும் விட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் முக்கியம்.
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன்’ என ருவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Reviewed by Author
on
September 18, 2020
Rating:

No comments:
Post a Comment