சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவியவர் இலங்கையர் கைது.Photos
சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவியவர் இலங்கையர் கைது.
இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
மன்னார் நிருபர்
05-09-2020
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் மெரைன் போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனுஸ்கோடி கடற்கரை ஓரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கம்பி பாடு கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து விசாரணை செய்தனர்.
இதன் போது குறித்த நபர் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க (30) என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் பிடிப்பட்டவர் சிங்களம் பேசுவதால் இவர் குறித்து இந்திய மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Reviewed by Author
on
September 05, 2020
Rating:


No comments:
Post a Comment