மன்னார் மாவட்டத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மஞ்சள் கட்டி மூடைகள் மீட்பு-சந்தேக நபர்கள் மூவர் கைது.
புலனாய்வுத்துறையினரின் இரகசிய தகவழ்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக நேற்று(9) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையில் சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த கடற்கரையோர பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ம 125 கிலோ 800 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் ஒரு கோடி 25 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.
-மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-இதே வேளை சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகளை நேற்று(9) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையிலான பொலிஸ் குழுவினர் பருத்திப்பண்னை பகுதியில் உள்ள வீட்டின் சமையல் அறையில் பதுக்கி வைத்திருந்த 154 கிலோ 500 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றியுள்ளதோடு அங்கிருந்து 2250 மில்லி கிராம் கேரள கஞ்சாவினையும் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
-கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ளதோடு,குறித்த நபர் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.
-இதே வேளை வங்காலை நானாட்டான் பிரதான வீதி,நருவிலிக்குளம் ஆயுர் வேத வைத்தியசாலைக்கு பின் பகுதியில் வைத்து நேற்று (9) வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் 33 கிலோ 650 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை வங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-வங்காலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் பியல் தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதோடு,29 மற்றும் 36 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் nரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மஞ்சள் கட்டி மூடைகள் மீட்பு-சந்தேக நபர்கள் மூவர் கைது.
Reviewed by Author
on
October 10, 2020
Rating:
Reviewed by Author
on
October 10, 2020
Rating:


No comments:
Post a Comment