வெளிநாடுகளிலிருந்து வந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு ஆபத்து
விற்பனை அனுமதி பத்திரம் கொண்டுள்ள விற்பனையாளர்களிடம் மாத்திரம் கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு ஆணையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பயனாளர்கள் தாங்கள் கொள்வனவு செய்யும் கையடக்க தொலைபேசி சட்டரீதியானதா என்பது தொடர்பில் தங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள 15 இலக்கங்கள் கொண்ட இமி இலக்கங்களை 1909 என்ற இலக்திற்கு அனுப்பி உறுதி செய்துக் கொள்ள முடியும்.
போலி கையடக்க தொலைபேசிகள் நாட்டிற்குள் கொண்டுவருவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி பாகங்கள் இரத்து செய்யப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு ஆபத்து
Reviewed by Author
on
October 01, 2020
Rating:

No comments:
Post a Comment