கழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தை... லண்டன் தமிழ் குடும்பம் பற்றிய தகவல் வெளியானது!
மேலும், ஒருவர் கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதையும் கண்டறிந்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளாக உயிருக்கு போராடிய நபரும் உயிரிழந்தார்.
அவர் மலேசியாவை சார்ந்த தமிழர் என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
செப்டம்பர் 21ம் தேதிக்குப் பிறகு கொலை செய்யப்பட்ட பெண் பூர்ணா காமேஷ்வரியை தொடர்புகொள்ள முடியவில்லை எனறு அவரது உறவினர்கள் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.
அப்போது சிறுவன் கைலாஷ், பூர்ணா காமேஷ்வரி மற்றும் வளர்ப்பு நாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
அவர்கள் மரணம் தொடர்பான உடற்கூறு ஆய்வு வெளியாகி உள்ளது. பூர்ணா காமேஷ்வரி ஆழமான கத்திக்குத்து காயம் காரணமாக உயிரிழந்துள்ளார். குழந்தை கைலாஷ் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுக் குழாய் உடைந்து உயிரிழந்துள்ளான்.
கொலைகாரன் என்று சந்தேகிக்கப்படும் பூர்ணா காமேஷ்வரியின் கணவன் குஹராஜாவும் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட ஆழமான கத்திக்குத்து காயம் காரணமாக உயிரிழந்துள்ளான்.
இது குறித்து டிடெக்டிவ் சீஃப் இன்ஸ்பெக்டர் சைன் ஹார்டிங் கூறுகையில், "பூர்ணா மற்றும் கைலாஷை தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவர்களது உறவினர்கள் புகார் கூறியதைத் தொடர்ந்து அந்த வீட்டுக்குள் நுழைந்தோம்.
அங்கு உயிரிழப்பைக் கண்டோம். எதனால் இப்படி நிகழ்ந்தது என்பதற்கான விசாரணை தொடர்கிறது. செப்டம்பர் 21க்கும் 24ம் தேதிக்கும் இடையே அந்த குடும்பத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். உங்களுக்கு அவர் குடும்பத்தைப் பற்றியோ, குறிப்பிட்ட நாட்களில் நடந்த நிகழ்வு பற்றியோ தெரிந்தால் போலீசில் தெரிவிக்கலாம்" என்றார்
.
.
கழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தை... லண்டன் தமிழ் குடும்பம் பற்றிய தகவல் வெளியானது!
Reviewed by Author
on
October 13, 2020
Rating:

No comments:
Post a Comment