மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி தனி நபர் பாதுகாப்பு அங்கிகள், உபகரணங்கள் கையளிப்பு.
-மன்னார் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடமையில் ஈடுபடும் சுகாதார தரப்பினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த தனி நபர் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் தலைவர் ஜே.ஜே.கெனடி தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குச் சென்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் மற்றும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகரன் ஆகியோரிடம் கையளித்துள்ளனர்.
இதன் போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை உப தலைவர் ரெஜி ஜெயபாலன், பொருளாளர் ஏ.நிமால்,கிளை நிறைவேற்று அதிகாரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி தனி நபர் பாதுகாப்பு அங்கிகள், உபகரணங்கள் கையளிப்பு.
Reviewed by Author
on
October 12, 2020
Rating:

No comments:
Post a Comment