மன்னார் மக்களுக்கு மன்னார் பிரதேச செயலாளரின் விசேட செய்தி-
எனவே தொற்றிலிருந்து உங்களையும் ஏனையோர்களையும் பாதுகாப்பதற்கு பின்வரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ். பிரதீபன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு அமைவாக .அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டிலிருந்து வெளியே செல்லவும், அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமானதாகும்,கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவதுடன் தொற்று நீக்கி மூலம் சுத்தப்படுத்தவும்., அனைத்து சந்தர்ப்பங்களிலும் இருவருக்கிடையே குறைந்தது 1 மீற்றர் இடைவெளியை பேணவும்,தற்போதைய சூழ் நிலையில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பது சிறந்ததாகும்.
மேற்குறிப்பிட்ட சுகாதார நடைமுறை களை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்துடன் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தோர் குறிப்பாக கொழும்பு,கம்பஹா மற்றும் பத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மன்னாரிற்கு வருகை தந்தோர் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மக்களுக்கு மன்னார் பிரதேச செயலாளரின் விசேட செய்தி-
Reviewed by NEWMANNAR
on
October 12, 2020
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 12, 2020
Rating:



No comments:
Post a Comment