உடுவில் புளியடி வைரவர் கோவில் வீதியில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய்கள் இறைச்சி கழிவுகளை நாய்கள் உண்பதோடு மக்களின் போக்குவரத்துக்கும் இடைச்சலாக கணப்படுகின்றது.
மேலும் மாதத்தில் இருதரம் குப்பை அகற்றவரும் பிரதேச சபை ஊழியர்கள் சரியான முறையில் குப்பை அகற்றுவதில்லை.குப்பைகளை அவ்வுழியர்கள் தீயிடுகின்றார்கள்.இதன் பொழுது கிருமிநாசனி போத்தல்கள் வெடித்து சிதறுவதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் 25.05.2020 இன்று புளியடி வைரவர் கோவிலில் மானம்பு திருவிழாக் கொண்டாட ஆயத்தங்கள் செய்யப்பட்டு கொண்டிருந்த வேளை விசமிகள் மாட்டு இறைச்சி கழிவுகளை வீசி விட்டு சென்று விட்டார்கள்.
அதனை அப்பகுதி தெருநாய்கள் இழுத்து வந்து ஆலய பகுதியில் விட்டு சென்றதை காணக்கூடியாக இருந்தது.
இது குறித்து பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் பொறுப்பற்ற செயலாளர் மற்றும் வினைத்திறன் அற்ற தவிசாளர் ஆகியோரின் செயற்பாட்டால் ஆலயத்தின் புனித தன்மை கேடுவதாக குறிப்பிட்டார்
உடுவில் புளியடி வைரவர் கோவில் வீதியில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment