பிரான்சில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வன்முறைக்கு பலி, மேலும் ஐவரின் நிலை கவலைக்கீடம்..!!
சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீடு முழுவதும் இரத்தம் தெறித்து இருக்க ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர்.
அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைக்கு பலியானவர்களில் சிறுவர்களும் மற்றும் ஒரு பெண்ணும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது, என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் 'கோமா' நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரான்சில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வன்முறைக்கு பலி, மேலும் ஐவரின் நிலை கவலைக்கீடம்..!!
Reviewed by Author
on
October 03, 2020
Rating:

No comments:
Post a Comment