காரைதீவு பிரதேசத்தில் கோவிட் 19 கட்டுப்பாடு தொடர்பில் கூட்டம்.
இக்கூட்டத்தில் தற்போது நாட்டில், குறிப்பாக கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட பகுதியில் ஏற்பட்ட நிலைமைகளை தொடர்ந்து காரைதீவு பிரதேச நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
இதனடிப்படையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டபோது கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளை தேசிய ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் மாவட்ட செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளை கருத்தில்கொண்டு தற்காப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமென தெளிவுபடுத்தப்பட்டது.
இதனடிப்படையில் இக்கூட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ். ஜீவராணி, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், காரைதீவு பிரதேச சபை செயலாளர் மற்றும் ஏனைய கொரோனா கட்டுப்படுத்தல் வழிகாட்டு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
காரைதீவு பிரதேசத்தில் கோவிட் 19 கட்டுப்பாடு தொடர்பில் கூட்டம்.
Reviewed by Author
on
October 08, 2020
Rating:
Reviewed by Author
on
October 08, 2020
Rating:




No comments:
Post a Comment