கொரோனாவால் உயிரிழந்த இலங்கை தொழிலாளர்களுக்கு காப்பீட்டு இழப்புகள்
அவ்வாறு உயிரிழந்த 14 தொழிலாளர்களில் 12 பேர் ஆண்கள் என்பதோடு இருவர் பெண்களாவர்.
அவர்களில் ஒன்பது பேர் சவுதி அரேபியாவிலும், நான்கு பேர் குவைத்திலும், ஒருவர் டுபாயிலும் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு இடையில் வெளிநாட்டு ஊழியர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய கொவிட் -19 காரணமாக உயிரிழக்கும் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படவுள்ளது.
அதன்படி மேலும், கொவிட் - 19 காரணமாக உயிரிழப்பு உறுதி செய்யப்பட்ட 23 பேரின் இறுதி கிரியைகளுக்காக தலா 40,000 ரூபாவை செலுத்த தீர்மானிக்ப்பட்டுள்ளது.
கொவிட் - 19 தொற்றால் உயிரிழந்த மேலும் ஒரு தொகுதி தொழிலாளர்கள் சம்பந்தமான தகவல்களை பணியகம் சேகரித்து வருவதாகவும் அவர்களுக்கும் எதிர்காலத்தில் காப்பீடும் வழங்கப்படவுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த இலங்கை தொழிலாளர்களுக்கு காப்பீட்டு இழப்புகள்
Reviewed by Author
on
October 13, 2020
Rating:

No comments:
Post a Comment