வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே இறந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டன – பவித்ரா
அரசுகள் மாறினாலும் அமைச்சர்கள் மாறினாலும் மக்களுக்கு உயர்ந்த சுகாதாரத்தை வழங்க வேண்டும் என்பதுவே நோக்கமாக இருந்தது.
இதனைத்தான் நாமும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இன்றும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
கொரோனாவை நாம் அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ளவில்லை. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகள், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத்தான் ஜனாதிபதியும் வலியுறுத்தினார். இறந்த முஸ்லிம்களின் உடல்களும் அவ்வாறுதான் எரிக்கப்பட்டன. இதில் எந்தவொரு அடிப்படைவாதமோ, இனவாதமோ கிடையாது.
சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே இவை முன்னெடுக்கப்பட்டன. இதில் எதிர்காலத்தில் மாற்றங்கள் வேண்டும் என்றாலும், அதுதொடர்பாக நாம் நடவடிக்கை எடுக்கத்தயாராகவே இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாகவே இறந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டன – பவித்ரா
Reviewed by Author
on
November 03, 2020
Rating:

No comments:
Post a Comment