அண்மைய செய்திகள்

recent
-

கொவிட் ஒழிப்புக்காக ”பாதுகாப்பாக இருப்போம்” - (“Staysafe” digital system) இலத்திரனியல் திட்டம்:

கொவிட் ஒழிப்புக்கு உதவுவதற்காக தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட “பாதுகாப்பாக இருப்போம்“ (Stay Safe) இலத்திரனியல் திட்டம் அறிமும் செய்து வைக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றாளர்களின் தொடர்புகளைக் கண்டறிவதில் உள்ள சிரமங்கள் மற்றும் நோய்க்காவிகளின் சுழற்சி என்பவை கொவிட் பரவுவதைத் தவிர்ப்பதில் முக்கிய சவாலாக உள்ளது. “பாதுகாப்பாக இருப்போம்“ இலத்திரனியல் திட்டம் இந்த நெருக்கடிக்குத் தீர்வை வழங்குகின்றது.

 ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணி நேற்று ஒன்றுகூடிய போது - தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வா இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். ”பாதுகாப்பாக இருப்போம்“ (stay safe) ஆனது QR குறியீட்டின் அடிப்படையில் அமைந்ததாகும்.

 கொவிட் 19 தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் - தனியார் மற்றும் அரச துறை நிறுவனங்களும் - அனைத்து மக்களும் இலகுவாக பயன்படுத்தக் கூடிய எளிய முறைமையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். Staysafe.gov.lk - என்ற இணையத்தளத்திற்குச் சென்று அனைத்து நிறுவனங்களுக்கும் தனித்துவமான QR குறியீட்டை பெற முடியும். எதிர்வரும் சனிக்கிழமை, 07ஆம் திகதி, முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 தமது திறன்பேசிகளைப் (Smart Phones) பயன்படுத்தி, எந்தவொரு நிறுவனத்தினாலும் தமது பெயர், முகவரி, உரிமையாளரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை வழங்கி மிகவும் இலகுவாகத் தமக்கான QR குறியீட்டை பெற்றுக்கொள்ள முடியும். திறன்பேசிகள் உள்ள மற்றஇல்லாத அனைவரையும் பதிவுசெய்து அவர்கள் சென்று வரும் அனைத்து இடங்களையும் அறிந்துகொள்ள முடியும். இது தொடர்பாக அனைத்து ஊடகங்களின் மூலமாகவும் மக்களைத் தெளிவுபடுத்துவதற்குத் தகவல் மற்றும் தொடர்பாடல் முகவர் நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணி, மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் கொரோனா பரவல் தொடர்பான தற்போதைய நிலைமையினை இதன்போது நேற்று எனக்கு விளக்கியது. மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மட்டும் விடயங்களைக் கையாள முடியாது. மக்களின் இயல்பு வாழ்க்கை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஏனைய அனைத்து அம்சங்களையும் சமமாகக் கருத்திற் கொண்டு தெளிவுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதனை செயலணியிடம் ஜனாதிபதி  குறிப்பிட்டார்,

நோய்த்தொற்றை ஒழிப்பதற்குத் தீர்வை கண்டறியும் வரை நாட்டை முடக்கி வைக்க முடியாது என்பதனை அவர் சுட்டிக்காட்டியதுடன், சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அனைவரும் தத்தமது நாளாந்தச் செயற்பாடுகளை வழமை போன்று முன்னெடுக்கத் தயாராக வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் காவற்துறையினருக்கு ஜனாதிபதி  பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த,  ஜனாதிபதி செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் செயலணியின் ஏனைய உறுப்பினர்களும் நேற்றைய கலந்துரையாடலில் பங்குபற்றினர். 



கொவிட் ஒழிப்புக்காக ”பாதுகாப்பாக இருப்போம்” - (“Staysafe” digital system) இலத்திரனியல் திட்டம்: Reviewed by Author on November 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.