அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கடுமையாக எதிர்க்கும் ட்ரம்ப்!
இதேவேளை, பென்சில்வேனியா, வட கரோலினா, ஜோர்ஜியா, அலாஸ்கா மற்றும் நெவாடா ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவராமல் இழுபறியில் உள்ளன.
இதேனிடையே, நெவாடா மாநிலத்தில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் அதனைக் கைப்பற்றினால் ஆறு தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியைக் கைப்பற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது,
இதேவேளை, முடிவுகள் வெளிவராத பென்சில்வேனியா, வட கரோலினா, ஜோர்ஜியா, அலாஸ்கா ஆகிய மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார்.
இந்தச் சூழலில், நியூயோர்க், அரிசோனா ஆகிய மாநிலங்களில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்’ என இன்று வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை, தேர்தல் வாக்குகளை எண்ணுவதை இடைநிறுத்தும் வகையில்டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கடுமையாக எதிர்க்கும் ட்ரம்ப்!
Reviewed by Author
on
November 06, 2020
Rating:
Reviewed by Author
on
November 06, 2020
Rating:


No comments:
Post a Comment