அண்மைய செய்திகள்

recent
-

"மன்னாரில் பெய்யும் ஒவ்வொரு மழைத்துளியும் குளங்களை நிறைத்த பின்னரே கடலை சேரவேண்டும்"

 (மன்னார் பொறியாளர் சம்மேளனம்) "குளங்களை மீட்போம்" திட்டதின்கீழ் முதலாவதாக "எமில் நகர் குளத்தை" பெரிதாக்கி அதன் தற்போதைய பரப்பை போல் மூன்று மடங்காக்கியும், இரண்டு வாய்க்கால்களை அருகில் இருக்கும் கிராமங்களினூடு அமைத்தும் மழைநீரை சேகரிக்கும் திட்டம் 01/10/2020 முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 இதன் முதுகெலும்பாக செயற்பட்டு வரும் மன்னார் பிரதேச செயலாளருக்கும், முழு ஒத்துழைப்பை வழங்கிவரும் கமநலதிணைக்கள தலைவருக்கும், நகரசபைக்கும், அத்துமீறிய நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவிய ஊர் மக்களுக்கும் எமது நன்றிகள். 60 வீதமான வேலைகள் முடிவடைந்திருந்தாலும் மீதி இருக்கும் 40 வீதமான வேலைகளான,
 1) தோண்டப்படும் வாய்க்காலின் அருகிலுள்ள ஊர்களினூடு சிறிய உபகால்வாய்களை அமைத்து ஊருக்குள் பெய்யும் மழைநீரை கால்வாய்களுக்குள் கொண்டு சேர்ப்பது,
 2) பராமரிப்பற்று கிடக்கும் கதவுகளை சீரமைத்து கடல் நீர் உட்புக விடாமல் தடுப்பது என இவ்விரு வேலைகளையும் மழைக்குமுன் செய்து முடிப்பதில் தான் இந்த திட்டத்தின் முழு வெற்றி தங்கியுள்ளது. 

 எனவே, அதற்கு மக்களினதும் நகர சபையினதும் பூரண ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

மன்னார் பொறியாளர் சம்மேளனம்




"மன்னாரில் பெய்யும் ஒவ்வொரு மழைத்துளியும் குளங்களை நிறைத்த பின்னரே கடலை சேரவேண்டும்" Reviewed by Author on November 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.