அண்மைய செய்திகள்

recent
-

கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று மீட்பு

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் தம்பலகாமம்-கோயிலடி பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கருணாகரன் (60 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குளிப்பதற்காக சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என்று பார்த்த போது கிணற்றில் விழுந்த நிலையில் கிடப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

 இதனையடுத்து அயலவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் இன்று சடலத்தை மீட்டுள்ளதாகவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று மீட்பு Reviewed by Author on November 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.