நாட்டை முடக்குவதால் அல்ல, நாம் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமே கோவிட்டை தோற்கடிக்க முடியும்- ஜனாதிபதி
இருப்பினும், இந்த நோய்த்தொற்றுக்கு நிரந்தரச் சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் -
இனி நாம் நாட்டை முற்றாக மூடிவிட்டு மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்புக்களை ஏற்படுத்த முடியாது.
பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதன் விளைவானது - நமது குழந்தைகளின் கல்வியில் பல ஆண்டுகளுக்குத் தாக்கத்தைச் செலுத்தக்கூடும்.
மேலும் - அன்றாடம் தொழில் செய்து வாழ்பவர்கள் மற்றும் வணிகச் சமூகத்தினர் மீது கொவிட் 19 ஏற்படுத்தியுள்ள தாக்கம் பாரியளவில் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
எனவே - இந்த சந்தர்ப்பத்தில், இலங்கையர்களாகிய நாம் அனைவருமே, அனைத்து அரசியல் சித்தாந்தங்களையும் வேறுபாடுகளையும் களைந்துவிட்டு, நமது நாட்டின் பாதுகாப்பிற்காகவும் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட வேண்டும்.
நாம் ஒவ்வொருவருமே - சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலமும் மட்டுமே, கொவிட் -19 நோய்த்தொற்றைத் தோற்கடிக்க முடியும் என கூறியுள்ளார்.
நாட்டை முடக்குவதால் அல்ல, நாம் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமே கோவிட்டை தோற்கடிக்க முடியும்- ஜனாதிபதி
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment