மனித உரிமை ஆணைக்குழுவினால் வடமாகாண ஆளுனருக்கு விசேட கடிதம்
இதனால் அவர்களது விவசாய நடவடிக்கைகள் முற்றாக பதிப்படைந்துள்ளதுடன் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் எனவே குறித்த பகுதி மக்களின் காணி தொடர்பான பிணக்கிணை தீர்கும் வரை அப்பகுதி மக்களின் விவசாய நடவடிக்கைகளை அனுமதிக்குமாறு கோரி வவுனியா மனித உரிமை காரியாலயத்தில் முறையிட்டுள்ளனர்,
இதனையடுத்து மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயமானது வடமாகாண ஆளுனருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது,
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் குறித்த மாந்தை கிழக்கு பகுதியில் யுத்ததிற்கு முன்னரும் பின்னரும் அனேக விவசாயிகள் உறுதிகாணிகளிலும் அரச காணிகளிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பிரதேச செயலகத்தின் ஊடாக அவ்வாறு விவசாய செய்களை மேற்கொண்டு வந்த நிலங்கள் பிணக்குள்ளதாக தெரிவித்தும் விவசாயத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது
எனினும் அவர்களைப்போண்று அரசகாணிகளிற்கு உறுதி வைத்திருக்கும் வேறு ஒரு தரப்பினர்குக்கும் மாத்திரம் விவசாய செய்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அப் பகுதி கிராம சேவகர் ஒருவருக்கும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒழுங்கான தீர்வை பெற்றுத்தர கோரி மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியும் சட்டதரணியுமான வசந்ததராஜாவின் கவனத்திற்கொண்டுவந்ததை தொடர்ந்து குறித்த பிரச்சினை வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரியதர்சன ஊடாகா மேலதிக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது
அவ் விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பிணக்கு ஆணது தீர்கப்படும் வரை தொடர்சியாக பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய உணவு உற்பத்தி தேவையை அடிப்படையாக கொண்டும் கோரோன பாதிப்பில் இருந்து இவ் விவசாயிகள் மீண்டு வருவதற்காகவும் என விவசாய திணைக்களத்தினூடாக பாதிக்கப்பட்ட விவசாயிகளிற்கு தற்காலிகமாக குறித்த பிரதேச செயலத்தினால் விவசாயத்திற்கு தடைசெய்யப்பட்ட விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு வவுனிய மனித உரிமை ஆணைக்குழுவினால் அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவினால் வடமாகாண ஆளுனருக்கு விசேட கடிதம்
Reviewed by Author
on
November 09, 2020
Rating:

No comments:
Post a Comment